மதுரை அருகே சமயநல்லிணக்கத் திருவிழா.

64பார்த்தது
மதுரை அருகே சமயநல்லிணக்கத் திருவிழா.
மதுரை சிக்கந்தர் சாவடியில் இன்று மாலையில் சமயநல்லிணக்கத் திருவிழா நடைபெற்றது.

மதுரை சிக்கந்தர்சாவடியில் மந்தையம்மன், முணியாண்டி, காளியம்மன் கோவிலில் வைகாசித் திருவிழா தொடங்கியது. ஆரம்பமாக சிக்கந்தர் தர்காவின் முன்னுள்ள கொடிமரத்தடியில் சக்கரைப் பாத்தியா வைத்து ஊர்மக்கள் வழிபட்டனர். அதைத்தொடர்ந்து முளைப்பாரிகளைக் கொண்டுவந்து கரைக்கும் சிக்கந்தர் ஊருணி அருகேயும் வழிபாடு செய்தனர்.
இன்று (மே. 21)மாலை தர்காவிற்கான கொடிமரத்தை மந்தையம்மன் கோவிலில் வைத்து வழிபட்டு இந்துக்களே தூக்கிக். கொண்டுவந்து நடுவது இத்திருவிழாவின் சிறப்பு அம்சமாகும். இது சமய நல்லிணக்கத்திற்குச் சான்றாகத் இந்நிகழ்வு திகழ்கிறது.

தொடர்புடைய செய்தி