மதுரைக்கு வரும் பிப். 27 ம்தேதி பிரதமர் மோடி வருகை தரவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி வரும் பிப். 27 ம்தேதி காலை திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சூலூர் ஹெலிபேடியில் இறங்கி பின்னர் சாலை மார்க்கமாக திருப்பூர் அருகே உள்ள பல்லடத்தில் மதியம் நடைபெறும் பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் வருகிறார்.
மதுரை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக வந்து மாலை 5 மணிக்கு ஜீவா நகரில் உள்ள டிவிஎஸ் லட்சுமி பள்ளியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள தாஜ் ஹோட்டலில் இரவு தங்குகிறார்.
மறுநாள் பிப்ரவரி 28 காலை மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி செல்கிறார்.
அங்கு நடைபெறும் விழாவிலும் பின்னர் திருநெல்வேலியில் நடைபெறும் பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார்.
மதுரை நகருக்கு பிரதமர் வருவதை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியை பலப்படுத்தி வருகின்றனர்.