மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் 1433ம் பசலி மாசி மாதம் வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமாள் மூலவர் பிரதோஷ நாயகர் பிரதோஷ நாயகி ஆகியோருக்கு அபிஷேகம் ஆராதனை இன்று நடைபெற்றது.
இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி எழுந்தருளி திருக்கோயில் வளாகத்தை மூன்று முறை வலம் வந்து தீபாராதனை நடைபெற்று பிரதோஷம் நிறைவடைந்தது.