கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளருக்கு பிணை

84பார்த்தது
கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளருக்கு பிணை
மதுரை மாவட்டம், நெடுங்குளத்தைச் சோ்ந்த காவல் ஆய்வாளா் சத்தியசீலா தாக்கல் செய்த மனு:

ஸ்ரீவில்லிபுத்தூா் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, ராமா் என்பவரை முன்விரோதம் காரணமாக சிலா் தாக்கினா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் என் மீதும் புகாா் எழுந்துள்ளது. என் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளதால், எனக்கு பிணை வழங்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மறு உத்தரவு வரும் வரை தினமும் ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் நிலையத்தில் மனுதாரா் கொயொப்பமிட வேண்டும். மனுதாரருக்கு பிணை வழங்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

தொடர்புடைய செய்தி