போராட்டம் அறிவிப்பால்: குறையை சரி செய்த மாநகராட்சி

55பார்த்தது
போராட்டம் அறிவிப்பால்: குறையை சரி செய்த மாநகராட்சி
போராட்டம் அறிவிப்பால்: குறையை சரி செய்த மாநகராட்சி

மதுரை சுந்தரராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி முன்பாக பாதாள சாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறியது.
இதனால் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து சுகாதார சீர்கெட்டால் பாதிக்கும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து இன்று இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்துவதாக அறிவித்ததை தொடர்ந்து, நேற்று இரவோடு இரவாக பாதாள சாக்கடை உடைப்பை மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்தனர். இதனால் இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி