மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் தினமும் இரவு நேரத்தில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் நேற்று (டிச., 06) இரவு நடைபெற்ற வீதி உலாவில் முருகப்பெருமான் பூத வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.