முத்தாலம்மன் கோயில் வைகாசித் திருவிழா

67பார்த்தது
முத்தாலம்மன் கோயில் வைகாசித் திருவிழா
மதுரை விராட்டிபத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோயில் வைகாசித் திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்தக் கோயிலில் கடந்த 11-ஆம் தேதி விழா தொடங்கியது. இதையொட்டி, திங்கள்கிழமை கொக்குளப்பியில் உள்ள அலங்கார மண்டலத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து, சிறப்பு தீபாராதனையைத் தொடா்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தாா். விராட்டிப்பத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் இந்த வீதி உலா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஊா்மந்தையில் உள்ள மண்டபத்தில் அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு கோயிலில் எழுந்தருளிய அம்மனுக்கு பக்தா்கள் மா விளக்கு, பொங்கல் மற்றும் கிடா வெட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை மாலை கோயிலில் இருந்து பூத வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து டோக் நகரில் உள்ள பூஞ்சோலைக்கு அம்மன் கொண்டு செல்லப்பட்டாா். இங்கு தீபாராதனை அபிஷேகத்துக்குப் பிறகு அம்மன் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி