மதுரை மாவட்ட மக்களவை உறுப்பினராக இருக்கக்கூடிய சு வெங்கடேசன் வண்டியூர் பகுதிக்கு வரவில்லை. எந்த திட்டங்களும் செய்யவில்லை எனக் கூறி கண்டா வர சொல்லுங்க என்ற ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இதற்கு நேற்று பதில் அளித்த எம்பிசு வெங்கடேசன், ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் போடப்படுவதில்லை. கடைகளில் அரிசி கடத்தப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. உண்மையை சொன்னதால் பாதிக்கப்பட்ட அவர்கள்தான் இந்த போஸ்டர் ஒட்டி உள்ளார்கள் என விளக்கம் அளித்துள்ளார்.