மதுரை மாநகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மதுரை சிம்மக்கல் பகுதியில் பாஜக மாநில செயலாளர் இராம. ஸ்ரீனிவாசன் தலைமையில் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
பாஜகவினர் அப்பகுதியில் உள்ள வீடுகள் கடைகள் உள்ளிட்ட இடங்களில் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து கையெழுத்துக்களை பெற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இராம. ஸ்ரீனிவாசன் கூறுகையில்,
புதிய கல்விக் கொள்கையை வாயிலாக இந்தியை திணிப்பது போல திமுக கபட நாடகம் ஆடி வருகிறது. இந்தியா முழுவதும் மூன்றாவது மொழியாக இந்திய கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் கொள்கையாக உள்ளது.
1965 ஆம் ஆண்டில் அண்ணாதுரை நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நேர்மை இருந்தது. அவர் எந்த ஒரு இந்தி பள்ளிக்கூடமும் நடத்தவில்லை. ஏதாவது ஒரு இந்திய மொழியை மூன்றாவது மொழியாக கற்றுக்கொள்ள வேண்டும் என கூறுகிறோம்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகன் பிரான்ஸ் மொழியை மூன்றாவது மொழியாக கற்றுக் கொள்கிறான். ஏழை, எளிய மாணவர்கள் மூன்றாவது மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என கூறுகிறோம். இந்தி எதிர்ப்பில் அறிஞர் அண்ணாதுரையிடமிருந்த நேர்மை மு. க. ஸ்டாலினிடம் இல்லை. அண்ணாதுரை எந்தவொரு இந்தி பள்ளிக்கூடமும் நடத்தாமல் இந்தியை எதிர்த்தார். திமுகக்காரர்கள் நடத்தும் இந்தி பள்ளிக்கூடங்களை மு. க. ஸ்டாலினால் மூட முடியுமா என கூறினார்.