காணாமல் போன குழந்தை மீட்பு: 2-பெண்கள் கைது

55பார்த்தது
மதுரை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி அருகேயுள்ள டோனாவூர் கிராமத்தை சேர்ந்த சுந்தரி (39) என்ற பெண் தனது பிள்ளைகளுடன் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மேலமாசி வீதி பகுதியில் சுந்தரி தனது
3 குழந்தைகளுடன்
படுத்த உறங்கியுள்ளார்.

அதிகாலை 3 மணி எழுந்து பார்த்த போது சுந்தரியின் 6 மாத குழந்தையான சக்திபிரியாவை காணவில்லை, அப்போது பதட்டமடைந்த சுந்தரி அருகில் அங்கும் தேடியுள்ளார்.

இதனால் அச்சமடைந்த சுந்தரி் தனது 6 மாத பெண் குழந்தை காணாமல் போனது குறித்து திடிர்நகர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் மேலமாசி வீதி பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு நடத்தியுள்ளனர்.

அதில் இரு பெண்கள் ஸ்கூட்டியில் வந்து தூங்கி கொண்டிருந்த குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிசிடிவி காட்சியனை காண்பித்து குழந்தையின் தாயார் சுந்தரியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடந்த வாரம் இரு பெண்கள் தன்னிடம் வந்து பெண் குழந்தை தந்தால் பணம் தருவதாக கூறி குழந்தையை கேட்டதாகவும் ஆனால் தான் மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

அவர்களின் வீட்டு முகவரிக்கு சென்று அங்கிருந்து கடத்தப்பட்ட 6 மாத பெண் குழந்தையை மீட்டனர்.

குழந்தையை கடத்தியதாக செந்தாமரை, மகேஸ்வரி ஆகிய இரு பெண்களையும் திடீர்நகர் காவல்துறையினர் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி