அச்சத்தை ஏற்படுத்தும் மாசி வீதி பாழடைந்த கட்டடங்கள்

854பார்த்தது
அச்சத்தை ஏற்படுத்தும் மாசி வீதி பாழடைந்த கட்டடங்கள்
அச்சத்தை ஏற்படுத்தும் மாசி வீதி பாழடைந்த கட்டடங்கள்

மதுரை மாசி வீதிகளில் பாழடைந்த கட்டடங்களை பாதுகாப்பு கருதி இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டும், அதை பொருட்படுத்தாமல் உரிமையாளர்கள் உள்ளதால் அருகில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

மாசிவீதிகளை சுற்றி தொடர்ந்து கட்டடங்கள் இடிவதும், உயிர்ப்பலி ஏற்படுவதும் தொடர் கதையாகி நடந்து வருகிறது. தீயணைப்புத்துறை சார்பில் 1000 கட்டடங்களில் தீத்தடுப்பு சாதனங்கள் இல்லை, ஆபத்தின்போது வெளியேற அவசர வழி இல்லை என நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

வசிப்பதற்கே லாயக்கற்ற கட்டடங்களை கண்டறிந்து உடனடியாக இடிக்குமாறு மாநகராட்சி தரப்பில் இருந்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. பொருளாதார ரீதியாக வசதியாக இருக்கும் சிலர், உடனடியாக அந்த பணியை மேற்கொண்டனர். அதேசமயம் இந்த

கட்டடத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே வைத்து குடும்பம் நடத்தி வரும் உரிமையாளர்கள் கண்டும், காணாமல் உள்ளனர். இதுகுறித்து
மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி