மதுரை வைகை ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் அலட்சியத்துடன் சில இளைஞர்கள் வைகை ஆற்றில் குளித்து வருகின்றனர். பந்தல்குடி கால்வாய் பகுதியில் வெள்ள நீரில் சிக்கி ஒரு நபரை மீட்கும் பணி நடைபெற்று வரும் அதே பகுதியில் வைகை ஆற்றிற்குள் வெள்ளத்தில் இளைஞர்கள் குளித்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. எனவே வைகையாற்று பகுதியில் அதிக அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் காவல்துறை பாதுகாப்பு தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.