மதுரை செல்லூர் பகுதியில் தனியார் மருத்துவமனையை திறந்து வைத்த பின் செய்தியாளர்களுக்கு சந்தித்து பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி. கே. வாசன் கூறுகையில்,
"உலகளவில் இந்தியாவில் தான் சுகாதார கட்டமைப்பு போற்றக் கூடிய வகையில் உள்ளது. மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லாமல் அனைத்து மாநிலங்களில் சுகாதாரத்துறைக்கு நிதியை வழங்கி வருகிறது.
அதன் அடிப்படையில் எய்ம்ஸ் மருத்துவமனை படிப்படியாக வளர்ந்து வருகிறது ஒரு காலக்கெடுவிற்குள் கட்டி முடிக்கப்பட்டு
மதுரையின் "மைல் கல்லாக" எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்.
1999 ஆம் ஆண்டு மூப்பனார் தலைமையில் கூட்டணி அமைந்த போது ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று எடுத்துரைக்கப்பட்டது என்பதை நினைவு கூற விரும்புகிறேன். தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று இருந்தால் தங்களுடைய கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது என்று தலைவர்களும் தொண்டர்களும் நினைப்பது தவறு கிடையாது.
ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு எப்படி வர வேண்டும் என்றால் நல்ல கூட்டணி, ஒத்த கருத்துடைய கூட்டணி, அதன் அடிப்படையில் கூட்டணியின் பலம் மக்களின் நம்பிக்கை வெற்றி வாய்ப்பு சட்டமன்ற உறுப்பினரின் எண்ணிக்கை அதனைச் சார்ந்தே கூட்டணி அரசின் வாதமாக வரும் நாட்களில் இருக்கப் போகின்றது" என்றார்.