பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக அறிவித்தது தமிழ்நாடு அரசு

76பார்த்தது
பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக அறிவித்தது தமிழ்நாடு அரசு
பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பாம்பு கடி தொடர்பான சிகிச்சை விவரங்களை தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இதன்மூலம், பாம்பு கடி தொடர்பான தரவுகளை ஆராய்ந்து பாம்பு கடிக்கு சிகிச்சை அளிப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும் என்றும் குறிப்பாக ஊரகப் பகுதிகளில் பாம்புக் கடிக்கான மருந்துகளை தேவையான அளவுக்கு இருப்பு வைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி