மதுரை மாநகராட்சி கீழபனங்காடி அண்ணாமலையார் நகர் பகுதியில் பிரதான சாலையில் உள்ள குடியிருப்புகளை சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்புவாசிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
தங்களது குழந்தைகளை தோளில் தூக்கி சுமந்தவாறு வீடுகளில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. தேங்கி நிற்கும் மழைநீரால் பாம்புகள் வீடுகளுக்கு செல்வதாகவும், கடும் துர்நாற்றத்துடன் மழை நீர் குடியிருப்புகளுக்குள் வருவதாகவும் குடியிருப்புவாசிகள் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர்.