உ.பி: கையா கிராமத்தில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். அவதேஷ் (42) என்பவர் தனது மனைவி மீனா (40), மகன் ரோகித் (11), தாயார் கீதா (63) ஆகியோருடன் பைக்கில் சென்றபோது, பின்னால் வந்த பேருந்து மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து, நால்வருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறுவன் ரோகித்தை தவிர மற்ற 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.