உ.பி: முசாபர்நகரில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 வருடங்களாக ரஜத் மற்றும் மனு காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், மனு வீட்டாரின் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, மனு மற்றும் ரஜத் கரும்புத் தோட்டத்திற்குச் சென்று தற்கொலை செய்து கொள்வதை செல்ஃபி வீடியோ எடுத்த பின் இருவரும் விஷம் குடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மனு உயிரிழந்ததையடுத்து, ரஜத் கவலைக்கிடமாக நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.