'ஆச கூட' என்ற பாடல் மூலம் பிரபலமடைந்த சாய் அபயங்கர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'பென்ஸ்' படத்திற்கும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்திற்கும் இசையமைப்பது நமக்கு தெரிந்ததே. இந்நிலையில், சிம்புவின் 49-வது மற்றும் 51-வது படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் சாய் அபயங்கரின் 3-வது இண்டிபெண்டண்ட் பாடலான 'சித்திரபுத்திரி' என்ற பாடல் வெளியானது.