விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் உதயா பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு சர்க்கரை வியாதி இருந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை மூலமாக வலது கால் அகற்றப்பட்டுள்ளது. இவர் தீராத விளையாட்டுப் பிள்ளை, ஓகேஓகே போன்ற சந்தானத்தின் படங்களுக்கு காமெடி வசனங்கள் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.