சினிமாவில் அஜித் எத்தனையோ படங்களில் போலீஸ் ரோல் ஏற்று நடித்திருக்கிறார். வலிமை, என்னை அறிந்தால், ஆரம்பம், கிரீடம், ஆஞ்சநேயா, மங்காத்தா என்று பல படங்களில் போலீஸ் ரோலில் நடித்திருக்கிறார். ஆனால், இந்த படங்களுக்கு முன் அவர் போலீஸ் ரோலில் நடிக்க இருந்தார். அந்தப் படம் தான் 'மகா'. இந்தப் படத்தின் ஷூட்டிங் எல்லாம் தொடங்கப்பட்ட நடைபெற்று வந்தது. அதோடு மகா படத்தோட போஸ்டர்களும் வெளியானது. எதோ ஒரு காரணத்திற்காக அந்தப் படம் கைவிடப்பட்டது.