மதுரை: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

76பார்த்தது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளரை சந்தித்து பேசுகையில்;

தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறு ஓடுகிறது என்றும், தமிழ்நாட்டின் சிறுமி முதல் பாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகாமல் இருக்கின்றனர் என்றும், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் தமிழ்நாட்டில் 90% நிறைவேற்றி விட்டார்கள் எல்லாமே செஞ்சிட்ட அப்புறம் எதுக்கு முதல்வர். கூட்டணி. கூட்டணி. சொல்றாரு.! கொள்கை கூட்டணி அவர் தான் கூறுகிறாரே தவிர அவருடன் இருப்பவர்கள் யாரும் கூவவில்லை.

திருமாவளவன் கூறியதை இதன் வாயிலாக முதல்வருக்கு டெடிகேட் பண்ணுகிறேன். முதல்வர் தான் கூட்டணிக் குறித்து பேசுகிறாரே தவிர அவருடன் உள்ளவர்கள் யாரும் கூட்டணி குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. திருமாவளவன் நொந்து நூலாகிவிட்டார்.

எங்கள் கட்சியை நம்பி பொதுச் செயலாளர் எடப்பாடி தான் முதல்வர் என அதிமுகவை ஆட்சி அமைப்பதற்கு யார் வருகிறார்களோ அவர்களை இனைத்துக் கொண்டுதான் களத்திற்கு போகப் போகிறோம். , நாங்க அழைத்தோமா அவருக்கு எப்படி தெரியும்.! நீங்கள் இது விவகாரமாக அவரிடம் தான் கேட்க வேண்டும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி