ஆண்கள் மட்டுமே கொடி கட்டி பறந்த பல்வேறு துறைகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் பலரும் ஆண்களை விட மிகப் பெரிய சாதனைகளை செய்துள்ளனர். அந்தவகையில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர்தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இந்தியாவின் ஆரம்பக் காலங்களில் மருத்துவராக இருந்த சில பெண்களில் முத்துலட்சுமி ரெட்டியும் ஒருவர். ஆண்கள் கல்லூரியில் படித்த முதல் பெண் மாணவியும் இவர்தான். புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்டி புற்றுநோய் சிகிச்சை நிறுவனம் ஒன்றை சென்னை அடையாறில் தொடங்கியவர் இவர்.