மதுரை: ஆளுநரிடம் திமுகஅரசு அடிமையாக இருக்கிறது-செல்லூர் ராஜு

67பார்த்தது
அதிமுக ஆண்டுவிழாவை முன்னிட்டு மதுரை கே. கே. நகரில் உள்ள எம். ஜி. ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில்,
"2026ல் ஸ்டாலின் வீட்டுக்கு போவார் எடப்பாடி கோட்டைக்கு போவார். எடப்பாடி பழனிச்சாமி பெரிய மக்கள் செல்வாக்குடன் ஆட்சியமைப்பார்" என்றார்.

சென்னை மழை பாதிப்பை எடப்பாடி பழனிச்சாமி பார்வையிடவில்லை என்ற அமைச்சர் சேகர்பாபுவின் கருத்து குறித்த கேள்விக்கு,

"மழை பாதிப்புகளின் பணியாற்ற கட்சியினருக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். முதலமைச்சர் ஸ்டாலினின் ஊது குழலாக சேகர் பாபு செயல்படுகிறார். 3 மணி நேர மழையையே சென்னை தாங்கவில்லை.

ஸ்டாலின் ஆட்சிக்கு எடப்பாடி ஆட்சியே பரவாயில்லை என்று மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். திமுக ஆட்சியில் எந்த சாதனையும் செய்யவில்லை.

நேற்று வரை ஆளுநரும் அரசும் எலியும் பூனையுமாக இருந்தார்கள். இன்று இருவரும் ஒன்றாகியுள்ள அதிசயம் நடந்துள்ளது. சட்டமன்றத்தில் கேலி செய்து வெளியே அனுப்பபப்பட்டவர். எந்த கவர்னருக்கும் இது போல் ஒரு இழிநிலை வந்ததில்லை. கூட்டணி கட்சிகளை நம்ப வைத்து ஏமாற்றி கொண்டிருக்கிறார் ஸ்டாலின். எங்களை அடிமை அரசு என்று சொன்னார் ஸ்டாலின், இன்று அடிமையிலும் அடிமையாக இருக்கிறது திமுக அரசு" என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி