மதுரை: நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

59பார்த்தது
நடிகை கஸ்தூரி தெலுங்கர்கள் சமூகத்தினரை அவதூறாக பேசியதாக கூறி தமிழ்நாடு நாயுடு மகா ஜனசபை மற்றும் தமிழக நாயுடு சங்கம் என பல்வேறு அமைப்பை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.

தொடர்ந்து கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற பட்சத்தில் வருகின்ற நவ. , 10ஆம் தேதி மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் அமைந்துள்ள மன்னர் திருமலை நாயக்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி