மதுரை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தாழ்தள 20 புதிய பேருந்துகளை மாட்டுத்தாவணி
எம் ஜி ஆர் பேருந்து நிலையத்தில் இருந்து வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ. வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இது மட்டும் இல்லாமல் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்றனர்.