ஜாா்ஜ் ஜோசப் சிலைக்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு மரியாதை
மதுரை: பாரிஸ்டா் ஜாா்ஜ் ஜோசப்பின் 137-ஆவது பிறந்த நாளையொட்டி, மதுரை யானைக்கல் அருகே உள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு அந்த நலக்குழுவின் மதுரை மாவட்டத் தலைவா் கே. அலாவுதீன் தலைமை வகித்தாா். மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகா் மாவட்டச் செயலா் கணேசன் உள்ளிடோர் பங்கேற்றனர்.