வடமாநிலத்தவரிடம் முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

68பார்த்தது
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர். சரவணனை ஆதரித்து வடமாநிலத்தவரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்த பின்
செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

25ஆயிரம் வட இந்தியர் குடும்பம் மதுரையில் உள்ளது‌. அவர்களிடம் வாக்கு சேகரித்தோம்‌. அதிமுக ஆட்சியில் தான் வட இந்தியர்கள் நிம்மதியாக தொழில் பண்ணின்னோம் என்றனர்.

மத்தியில் மோடிஜி வந்தாலும் தமிழ் நாட்டில் அதிமுக தான் வர வேண்டும் என்று கூறி ஆதரவு கொடுப்பதாக கூறினார்கள்.

மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழர்கள் தனித்துவம் பெற்றதன் அடிப்படையில் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். அமித்ஷா எதையாவது பேச வேண்டும் என்று பேசியுள்ளார். திராவிட இயக்கம் தான் ஏழை எளிய மக்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.



எங்கள் கட்சி அழிந்து போய் விடும் என்று சொல்வதற்கு அண்ணமலை என்ன விஷ்வாமித்திரரா? அண்ணாமலைக்கு அரசியலே தெரியாது. அதிமுக பீனிக்ஸ் பறவை போன்றது. எத்தனையோ பேரை பார்த்து பல சோதனைகளை கடந்து வந்துள்ளது.

அண்ணாமலைக்கு தோல்வி பயம். அதனால் இதுபோன்று பேசி பார்க்கிறார். எத்தனை மலை வந்தாலும் சரி அதிமுகவை ஒன்றும் பண்ண முடியாது. இந்த அண்ணாமலை ஜுஜுபி. அண்ணாமலையை கிலிகிலினு கிழித்துவிட்டேன்.
"ரோட் ஷோ" என்று பிரதமரை அழைத்து வந்து அண்ணாமலை பிரதமரின் செல்வாக்கை ஒன்னுமில்லாமல் ஆக்கி விட்டார் என்றார்.

தொடர்புடைய செய்தி