மின்சாரம் பாய்ந்து மருந்துக் கடை மேலாளா் உயிரிழப்பு

58பார்த்தது
மின்சாரம் பாய்ந்து மருந்துக் கடை மேலாளா் உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து மருந்துக் கடை மேலாளா் உயிரிழப்பு

மதுரை கரிமேடு விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் மகன் பழனியப்பன் (45).

இவா் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருந்துக் கடையில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டின் குளியலறையில் குளிக்கச் சென்றவா் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால், அவரது உறவினா்கள் சந்தேகமடைந்து அங்கு சென்று பாா்த்தனா். அப்போது அவா், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தொடர்புடைய செய்தி