என்னை எந்த ஆலோசனை கூட்டங்களுக்கும் மாநகராட்சி அழைப்பதில்லை

57பார்த்தது
மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மேயர் இந்திராணி மற்றும் ஆணையாளர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் தொடங்கியவுடன் மேயரின் அருகே அமர்ந்திருந்த துணை மேயர் நாகராஜன்: பந்தல்குடி கால்வாயை முன்கூட்டியே தூர்வாரிருக்க வேண்டும் நாம் கவன குறைவாக இருந்துவிட்டோம், மாநகராட்சி பகுதியில் 18 அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டி புதர் மண்டி கிடக்கின்றது.

சொத்துக்கள் ஏலம் விடும் நடைமுறை கைவிடப்பட்டதால் சொத்து வரி நிலுவையில் உள்ளது சென்னையை விட மதுரையில் மட்டுமே குப்பை வரி அதிகமாக வசூல் செய்யப்படுகிறது என பேசி கொண்டிருக்கும் போதே துணை மேயரின் பேச்சை நிறுத்துமாறு திமுக மாமன்ற உறுப்பினர்கள் குறுக்கீடு செய்தனர்.

ஆலோசனை கூட்டத்தில் துணை மேயர் தங்களுடைய கருத்துகளை பேச வேண்டும் என திமுக மாமன்ற உறுப்பினர்கள் கூறியதையடுத்து,

இதற்கு பதிலளித்த துணை மேயர் நாகராஜன் "மாநகராட்சியில் ஆலோசனை கூட்டத்திற்கு என்னை அழைப்பதில்லை, என்னை அனுமதித்தால் தானே மக்கள் பிரச்சினைகளை பேச முடியும்" என கூறினார்.

இதனைத் தொடர்ந்து, துணை மேயர் நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது: -.

துணை மேயர் பேசும் போது மாமன்ற உறுப்பினர்கள் கேட்கக்கூடாது. ஆனால் அவர்கள் கேட்டிருக்கிறார்கள். மேயரும், ஆணையாளரும் அருகில் இருந்தார்கள் தெரியாமல் சொல்லி விட்டார்கள் என நான் புரிந்து கொள்கிறேன்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி