மேம்பாலத்தில் தடுப்பு சுவரில் மோதி விபத்து

83பார்த்தது
மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த கவிதா. அவரது மகளுடன் தெப்பக்குளம் பகுதியில் இருந்து கே. கே நகர் பகுதி நோக்கி செல்வதற்காக தனது ஜீப் காரில் புறப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஜீப் காரில் குருவிக்காரன் சாலை மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது மழை காரணமாக திடீரென கார் கண்ணாடி முழுவதிலும் பனி போல தண்ணீர் படந்துள்ளது.

இதனால் சிறிது நேரம் கட்டுப்பாட்டை இழந்தபோது பாலத்தின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் நல்வாய்ப்பாக கவிதா மற்றும் அவரது மகள் காயமின்றி தப்பினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் காரை மீட்டுஅனுப்பி வைத்தனர்.

இது குறித்து பேசிய கவிதா: காரை ஓட்டி வந்தபோது பாலத்தின் நடுவே ஒளிரும் ஸ்டிக்கர் மற்றும் எந்த தடுப்பும் இல்லாத நிலையிலும் சுவர்கள் இருப்பது தெரியாததால் இதுபோன்று கார் மோதி விட்டதாகவும் மேம்பாலங்களில் நடுவே தடுப்பு சுவர்களில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் மற்றும் சாலைகளின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர்களில் உரிய ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டாத நிலையில் அவ்வப்போது சாலை நடுவே உள்ள சுவர்களில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டு வருவதால் உரிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை இருந்துள்ளது.

தொடர்புடைய செய்தி