சிறிய அளவில் ஜவுளிப் பூங்கா அமைக்க விண்ணப்பிக்கலாம்

68பார்த்தது
சிறிய அளவில் ஜவுளிப் பூங்கா அமைக்க விண்ணப்பிக்கலாம்
மதுரை மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காஅமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜவுளித் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக தமிழ்நாடு அரசு துணி நூல் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக வழிகாட்டுதலின்படி தென்னிந்திய பயிற்சி, ஆராய்ச்சி சங்கத்தின் மூலம் 10, 12-ஆம் வகுப்பு
முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு (இருபாலருக்கும்) ஸ்பின்னிங், தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


மேலும், துணிநூல் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கா் நிலப்பரப்பில் 3 ஜவுளி உற்பத்தி தொழில் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.

தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டடங்கள், உற்பத்தி கூட கட்டடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ. 2. 50 கோடி இவற்றில் எது குறைவானதோ, அந்தத் தொகை தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படும்.



இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு மண்டல துணை இயக்குநா் அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 0452-2530020 என்ற தொலைபேசி அல்லது 96595 32005 என்ற கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தொடர்புடைய செய்தி