அதிமுக வேட்பாளர் பரபரப்பு பேட்டி

66பார்த்தது
அதிமுக வேட்பாளர் பரபரப்பு பேட்டி
மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி. வி. ராஜன் செல்லப்பா யானைமலை, கொடிக்குளம், மலை சாமிபுரம், புதூர், புதுப்பட்டி, நரசிங்கம் ஆகிய பகுதியில் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.


முன்னதாக ஒத்தக்கடை நரசிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
பின்னர் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் செய்தியாளரிடம் கூறுகையில் 


"நாடாளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட ஆர்டிஐ தகவலைத்தான் ஊடகங்களில் தெரிவித்திருந்தேன்.  


அவர் முறையாக பயன்படுத்தவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு பெயரெடுத்து கொள்கிறார்.

 5 வருடங்களில் 25 கோடி ரூபாய் நாடாளுமன்ற உறுப்பினருக்கு நிதியாக வழங்கப்படும்.   ஆனால் கொரோனா காலகட்டம் என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 17 கோடி அளவிற்கு நிதி வழங்கப்பட்டது.


ஏற்கனவே நான் 5 கோடி தான் செலவழித்து இருந்தார் என்று கூறினேன். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினராகபதவி வகித்த வெங்கடேசன் 4 கோடியே 34 லட்ச ரூபாய் நிதியை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார். மீதமுள்ள 12 கோடிக்கு என்ன பணிகளை செய்துள்ளார் என்பதை வெள்ளை அறிக்கை மூலமாக வெளியிட வேண்டும்.


சு. வெங்கடேசன் என்மீது வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்" என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி