ஆட்சியர் அலுவலகம் அருகே தீ விபத்து

58பார்த்தது
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கேண்டின் சிலிண்டரில் தீ பற்றியதால் பரபரப்பு - விரைந்து சென்று தீயை அணைத்த தீயணைப்புத்துறையினர்.


மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள அரசு வணிக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் சுய உதவிக்குழு சார்பில் சுயம்பு என்ற பெயரில் உணவகம் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்த உணவகத்தில் இன்று மாலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தபோது திடீரென கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு சிலிண்டரில் தீப்பிடித்து எறிய தொடங்கியுள்ளது.

இதனால் அச்சமடைந்த உணவக ஊழியர்கள் வெளியேறிய நிலையில் தல்லாகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

இதனையடுத்து சிலிண்டர்களை பாதுகாப்பது கையாள்வது குறித்து உணவக பணியாளர்களுக்கு தீயணைப்புத்துறையினர் உரிய அறிவுறுத்தல் வழங்கி சென்றனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரசு ராஜாஜி மருத்துவமனை அண்ணா பேருந்து நிலையம் உள்ளிட்ட பிரதான பகுதியில் திடீரென சிலிண்டரின் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று செயல்பட்டதால் எந்தவித விபத்துமின்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி