பெற்றோரை பராமரிக்காத மகன் மீது வழக்கு பதிவு.

51பார்த்தது
பெற்றோரை பராமரிக்காத மகன் மீது வழக்கு பதிவு.
மதுரையில் பெற்றோரின் பூர்வீக வீட்டைக் கைப்பற்றி, அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றிய மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மதுரை தவிட்டுச் சந்தை வேலாயுதம் பிள்ளை 1-ஆவது தெருவைச் சேர்ந்த ஜெயராமன் (83) என்பவர் வருவாய்த் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் தனது மனைவியுடன் கீழ வெளி வீதியில் உள்ள தங்களது பூர்வீக வீட்டில் வசித்து வந்தார். இந் நிலையில், மகன் சரவணக்குமார் தங்களை பராமரிக்காமல் இருப்பதாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஜெயராமன் புகார் அளித்தார். அதன்பேரில், சரவணன் தனது பெற்றோருக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் பராமரிப்புத் தொகையாக வழங்க வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால், சரவணன் தனது பெற்றோருக்கு பராமரிப்புத் தொகையை முறையாக வழங்கவில்லை. மேலும், தனது பெற்றோரை பூர்வீக வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார்.

இதுகுறித்து மதுரை மாந கரக் காவல் ஆணையர் லோகநாதனிடம் ஜெயராமன் புகார் அளித்தார். அதனை தொடந்து தெற்கு வாசல் போலீசார், பெற்றோர், முதுநிலை குடிமக்கள் நலச்சட்டத்தின் கீழ் சரவணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி