மாவட்டம் முழுவதும் 577 மி. மீ மழைப்பொழிவு பதிவு

85பார்த்தது
மாவட்டம் முழுவதும் 577 மி. மீ மழைப்பொழிவு பதிவு
மதுரை மாவட்டம் முழுவதும் 577 மி. மீ மழைப்பொழிவு பதிவு


மதுரை மாவட்டம் பேரையூர் பெரியபட்டி , கள்ளிக்குடி, மேட்டுப்பட்டி, தல்லாகுளம், மதுரை வடக்கு விமான நிலையம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலும் நேற்று ஒட்டுமொத்தமாக 577மி. மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

சராசரியாக 26 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகிய நிலையில் அதிகபட்சமாக பேரையூர் பகுதியில் 67மில்லி மீட்டர் மழைப்பொழிவும், மேட்டுப்பட்டி பகுதியில் 50 மில்லி மீட்டரும் பெரியபட்டி பகுதியில் 47 மில்லி மீட்டர் கள்ளிக்குடி பகுதியில் 44 மில்லி மீட்டர் மழைப்பொழிவும் குறைந்தபட்சமாக குப்பனம்பட்டி பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பொழிவும் பதிவாகியுள்ளது.

மதுரை மாநகரை பொருத்தமட்டிலும் தல்லாகுளம் பகுதியில் மற்றும் மதுரை வடக்கு பகுதியில் 42 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மதுரை விமான நிலையத்தில் 41 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி