மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை அதிகாரிகள் முறையாக கண்காணிப்பது இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
கரூர் அரவக்குறிச்சி கிராம பஞ்சாயத்துகளில் நடந்த முறைகேடு பற்றி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மேல்நிலை அதிகாரிகள் முதல் கீழ்நிலை அலுவலர்கள் வரை திட்டத்தை முறையாக கண்காணிப்பது இல்லை. அதிகாரிகள் பொறுப்பை உணர்ந்து பணிகளை செய்வதும் கிடையாது என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.