வாடிப்பட்டி தேவாலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி.

587பார்த்தது
வாடிப்பட்டி தேவாலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் உள்ள ஆரோக்கிய அன்னை திருத்தத்தில் ஆங்கில புத்தாண்டு 2024 பிறப்பையொட்டி சிறப்பு திருப்பலி நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது. இந்த 2023 ஆண்டிற்கு 11 மணி முதல் 12 மணி வரை சிறப்பு வழிபாடும் நற்கருணை ஆசியும் நடந்தது. அதன் பின் 12: 00 மணி முதல் 1. 30 மணிவரை 2024புத்தாண்டு பிறந்த பின் புத்தாண்டை வரவேற்று வரவேற்பு திருப்பலி நடைபெற்றது

இந்த திருப்பலிக்கு ஆரோக்கிய அன்னை திருத்தலம் அதிபர் பங்குத்தந்தை எஸ். வளன் அடிகளார் தலைமை தாங்கினார். உயர்மறை மாவட்ட கத்தோலிக்க சேவா இதழின் ஆசிரியர் அருள் தந்தை லாரன்ஸ்மறையுறை ஆற்றினார்.

இதன் ஏற்பாடுகளை, திருத்தல நிர்வாக தந்தை ஆன்டனி வினோ செய்திருந்தார். இதில், மதுரை, திண்டுக்கல், தேனி. சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :