மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகபட்டியில் நேற்று (21.02.2025) இரவு 11 மணியளவில் கார் மோதிய விபத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ்ன் மாவட்டத்தைச் சேர்ந்த மச்சிந்திரா பட்டில் (58) என்பவர் சுமார் 30 பேருடன் சுற்றுலா வேனில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து விட்டு திண்டுக்கல் நோக்கி புறப்பட்டார். வடுகபட்டியில் வாகனம் நின்றபோது, மச்சிந்திரா பட்டில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மச்சிந்திரா பட்டிலை வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்