மதுரை: குடிநீர் பிரச்சனை; மக்கள் சாலை மறியல்

74பார்த்தது
மதுரை: குடிநீர் பிரச்சனை; மக்கள் சாலை மறியல்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, ஜெமினிப்பட்டி புது காலனியில் கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதால், இன்று (நவம்பர் 23) காலை பேருந்து மறியல் போராட்டம் நடைபெற்றது.

சுமார் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தண்ணீர் தொட்டியில் போதுமான அளவு தண்ணீர் நிரப்பப்படாததால், மேட்டுப்பகுதியில் உள்ள புது காலனி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கந்தசாமி , பெரியசாமி புது காலனியைச் சேர்ந்த கந்தசாமி தலைமையில், இன்று (நவம்பர் 23) காலை 7: 20 மணி முதல் 7: 45 மணி வரை வாடிப்பட்டி-மேட்டுப்பட்டி செல்லும் பேருந்தை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் ஊராட்சி கிளார்க் சரஸ்வதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பிரச்சனை இன்று முழுமையாக தீர்க்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி