மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றி அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கிடப்பதாக சோழவந்தான் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்து. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். சடலத்தை ஆய்வு செய்த காவல்துறையினர், அது பெண் சடலம் என்றும் வயது சுமார் 50 - 60 வரை இருக்கலாம் என தெரிவித்தனர்.
மேலும் சடலத்தை உடற்கூராய்வுக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறந்த மூதாட்டி யார் அவரது மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.