சாம்பியன்ஸ் டிராபி 2025: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 6-வது லீக் ஆட்டம் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் இன்று நடைபெறுகிறது. இதில் ஏ பிரிவில் உள்ள நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இப்போட்டியில் நியூசிலாந்து அணி வென்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும். அதே நேரம் வங்கதேச அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றதால் இன்றைய ஆட்டத்தில் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும்.