மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜூன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான "விடாமுயற்சி" திரைப்படம் மார்ச் 3ம் தேதி NETFLIX ஓடிடி தளத்தில் வெளியாகிறது. கடந்த 6ம் தேதி "விடாமுயற்சி" திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில், "விடாமுயற்சி" ஓடிடியில் வெளியாக உள்ளது.