சோழவந்தான்: சாலையில் வீணாகி செல்லும் குடிநீர்

76பார்த்தது
சோழவந்தான்: சாலையில் வீணாகி செல்லும் குடிநீர்
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சி அரசு பள்ளி செல்லும் வழியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டும் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி சாலைகளில் பெருக்கெடுத்து செல்கிறது. மேலும் பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. நேற்று மாலை முதல் குடிநீர் வீணாகி வருவதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடமும், ஊராட்சி செயலாளரிடமும் தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் அதிகாரிகள் உடனடியாக உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி