சிவபெருமானுக்கு உங்கள் பாதுகாப்பு தேவையில்லை: நீதிமன்றம் கருத்து

73பார்த்தது
சிவபெருமானுக்கு உங்கள் பாதுகாப்பு தேவையில்லை: நீதிமன்றம் கருத்து
யமுனை நதிக்கரையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட சிவன் கோவிலை இடிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று (மே 30) அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த சிவன் கோவிலை இடிக்க அனுமதித்த நீதிமன்றம், சிவபெருமானுக்கு உங்களின் பாதுகாப்பு தேவையில்லை, மாறாக அவரிடமிருந்து பாதுகாப்பையும் ஆசீர்வாதத்தையும் நீங்கள்தான் பெற வேண்டும் என்று கூறியது. மேலும், யமுனை ஆற்றுப்படுகை மற்றும் வெள்ளப்பெருக்கு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோதக் கட்டுமானங்கள் அகற்றப்பட்டால் மகிழ்ச்சியடைவேன் என்றும் நீதிபதி கூறினார்.

தொடர்புடைய செய்தி