கள்ளக்காதல் - இடையூறாக இருந்த சிறுமி கொலை

17495பார்த்தது
கள்ளக்காதல் - இடையூறாக இருந்த சிறுமி கொலை
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி சமயமுத்து - மலர்ச்செல்வி. இவர்களுக்கு 7 வயது மகள் மற்றும் கார்த்திகா (5) என்ற இளைய மகளும் இருந்தனர். சமயமுத்து துபாயில் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், தர்மசுந்தர் (33) என்பவருக்கும், மலர்ச்செல்விக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இவர்கள் தனிமையில் இருந்ததை சிறுமி கார்த்திகா பார்த்துள்ளார். இதனால் சிறுமியை நேற்று (மே 22) கிணற்றில் வீசி தாய் கொலை செய்தார். தொடர்ந்து, மகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்தார். அப்போது, அவர்கள் நடத்திய விசாரணையில் இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தொடர்புடைய செய்தி