ரூ.20 லட்சம் லஞ்சம் - ED அதிகாரி வழக்கில் நிபந்தனை தளர்வு

69பார்த்தது
ரூ.20 லட்சம் லஞ்சம் - ED அதிகாரி வழக்கில் நிபந்தனை தளர்வு
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அவர் நாள்தோறும் காலை 10 மணிக்கு திண்டுக்கல் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (மே 23) வழக்கில் நிபந்தனை தளர்விக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர் வாரம் ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கூறி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி