நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநடி’யில் நடித்து புகழ் பெற்ற கீர்த்தி சுரேஷ், தற்போது மறைந்த பிரபல பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த சுப்புலட்சுமி எப்படி உலகப் புகழ்பெற்ற பாடகியாக மாறினார்? என்பது பற்றி இந்த படம் எடுக்கப்பட உள்ளது. கோலிவுட் இயக்குனர் ஒருவர் இப்படத்தை இயக்கவுள்ளதாகவும், முழு விவரம் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.