அறுந்து கிடந்த மின்வயர்! காலால் மிதித்த விவசாயி உயிரிழப்பு

82பார்த்தது
அறுந்து கிடந்த மின்வயர்! காலால் மிதித்த விவசாயி உயிரிழப்பு
வேலூர் மாவட்டம் சின்னபள்ளிகுப்பம் கிராமத்தை சேர்ந்த விநாயகம் (70) விவசாயம் செய்து வந்தார். நெல் நடவு செய்வதற்கு ஏற்றவாறு நிலத்தை தயார் செய்து நாள் தோறும் தண்ணீர் பாய்ச்சி வந்த விநாயகம் வழக்கம் போல நேற்று (மே 22) அதிகாலை 5 மணிக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவரது நிலத்தின் வழியாக சென்ற போது அங்கு அறுந்து கிடந்த மின் வயரை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.