தமிழகத்தில் லேசான பனிமூட்டம் காணப்பட வாய்ப்பு

54பார்த்தது
தமிழகத்தில்  லேசான பனிமூட்டம் காணப்பட வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஜன.23 ,24 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என்றும் கணித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி