கர்நாடகாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில், 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொப்பல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பு அக்.21ம் தேதி வழங்கப்பட்ட நிலையில், இன்று (அக்.25) தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டது. 98 பேருக்கு ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் நீதிமன்றம் வழங்கியது. இதில், தீர்ப்பு விவரங்களை கேட்ட உடனே ஆயுள் தண்டனை பெற்ற ஒரு குற்றவாளி அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.